

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் கடந்த 2018 டிசம்பரில் நேரிட்ட விபத்தில் துவாரகா பிரசாத் கன்வர் (42) படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து மாற்றுத் திறனாளியானார். தற்போது வரை அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. படுக்கையில் வாழும் அவருக்கு குடும்பத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இழப்பீடுவழங்காத காப் பீட்டு நிறுவனத்துக்கு எதிராக துவாரகா பிரசாத் கன்வர் தொடர்ந்த வழக்கு 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கரின் கோர்பா நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் கன்வர் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால்,
நீதிமன்றத்துக்குள் கன்வரால் வர முடியவில்லை. இதை அறிந்தநீதிபதி பி.பி.வர்மா, நீதிமன்ற அறையை விட்டு வாகன நிறுத்துமிடத்தில் இருந்த கன்வரை சந்தித்து விசாரணை நடத்தினார்.
அப்போது கன்வர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் வழக் கறிஞர்கள் உடன் இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.வர்மா விபத்தில் பாதிக்கப்பட்ட துவாரகா பிரசாத் கன்வருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் மனிதாபிமானத்தை வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.