Published : 13 Sep 2021 06:15 PM
Last Updated : 13 Sep 2021 06:15 PM

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்: பிரதமர் இரங்கல்

மங்களூரு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் இருந்த தீவிர அரசியலில் இருந்து வந்தார். 1980-ல் கர்நாடகாவின் உடுப்பி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து 1984, 1989, 1991 மற்றும் 1996 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 மற்றும் 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் நெருக்கமானவராக பெர்னாண்டஸ் இருந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து பெர்னாண்டஸ் ஒதுங்கி இருந்தார். கடந்த ஜூலை மாதம் தனது வீட்டில் யோகா பயிற்சி செய்தபோது தவறி விழுந்ததால் காயமடைந்தார். உடனடியாக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. அதன்பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இரஙல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x