ப்ரீத்தி ஜிந்தா புகார்: சிசிடிவி ஆதாரம் கிடைக்கவில்லை

ப்ரீத்தி ஜிந்தா புகார்: சிசிடிவி ஆதாரம் கிடைக்கவில்லை
Updated on
1 min read

நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் தொல்லை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மும்பை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த 5 சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாத வீடியோ பதிவுகளே அதில் உள்ளன. எனவே அதில் இருந்து எந்த ஒரு வலுவான ஆதாரத்தையும் பெற முடியவில்லை என்று மும்பை போலீஸார் கூறியுள்ளனர்.

ப்ரீத்தி ஜிந்தாவின் புகாரை அடுத்து முதல் கட்டமாக சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வலுவான ஆய்வு கிடைக்காததை அடுத்து ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய, சோனி தொலைக்காட்சி குழுமத்திடம் உள்ள வீடியோ பதிவுகளை மும்பை போலீஸார் கேட்டுள்ளனர்.

இது தவிர சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் 7 சாட்சிகளின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன், பிசிசிஐ செயலாளர் சஞ்சீவ் பாடீல் ஆகியோர் இதில் அடங்குவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in