லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாட கேரளாவில் இருந்து 4,500 கி.மீ. சைக்கிளில் பயணித்த முதியவர்

லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாட கேரளாவில் இருந்து 4,500 கி.மீ. சைக்கிளில் பயணித்த முதியவர்
Updated on
1 min read

கேரளாவை சேர்ந்த முதியவர் ஜோஸ், தனது 80-வது பிறந்த நாளை கொண்டாட 4,500 கி.மீ. தொலைவில் உள்ள லடாக்குக்கு சைக்கிளில் சாகச பயணம் செய்துள்ளார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டம், அதானி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளம்பராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். சைக்கிள் சாகச பயணத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜோஸ், தனது 80-வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டார்.

இதன்படி கடந்த ஜூலை 15-ம் தேதி திருச்சூரில் இருந்து லடாக்குக்கு சாகச சைக்கிள் பயணத்தை தொடங்கினார். சுமார் 4,500 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து நேற்று முன்தினம் லடாக்கின் கார்டங் லா பகுதியை அவர் சென்றடைந்தார். அவரோடு திருச்சூரை சேர்ந்த கோகுல், அவரது மனைவி மருத்துவர் லேகா லட்சுமி, 14 வயது மகள் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

தனது சைக்கிள் பயணம் குறித்து ஜோஸ் கூறியதாவது:

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் மீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது. அப்போது முதலே நீண்ட தொலைவு சாகச சைக்கிள் பயணங்களை மேற்கொண்டேன். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். ஓய்வுக்குப் பிறகும் எனது
சைக்கிள் ஆர்வம் குறையவில்லை. தற்போது சாகச சைக்கிள் பயணம் மேற்கொண்டு லடாக்கில் 80-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளேன்.

லடாக்கில் மலையேறும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. என்னோடு சைக்கிள் பயணம் மேற்கொண்டோர் செயற்கை சுவாசம் அளித்தனர். இதன் காரணமாக வெற்றிகரமாக லடாக் பயணத்தை நிறைவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜோஸ் உடன் பயணம் செய்த மருத்துவர் லேகா லட்சுமி கூறும்போது, ‘‘மிக உயரமான மலையேறும்போது ராணுவ வீரர்களுக்குகூட சுவாச பிரச் சினை ஏற்படும். சுமார் 4,500 கி.மீ. தொலைவை ஜோஸ் சைக்கிளில் கடந் துள்ளார். அவருக்கு பெரிய அளவில் உடல்நலப் பிரச்சினை ஏற்பட வில்லை’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in