கரோனா தொற்றில் குணமடைந்தவர்களும் 2 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம்: மத்திய அரசு வலியுறுத்தல்

கரோனா தொற்றில் குணமடைந்தவர்களும் 2 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம்: மத்திய அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலை யில், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறியிருந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தால் கூட, 2 டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தொற்றில் இருந்து முழு பாதுகாப்பு பெற்றதாக இருக்கும். கரோனாதொற்றில் பாதிக்கப்படாதவர்களைப் போலவே கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு குண மடைந்தவர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி என்ற விஷயத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே, ‘கோ-வின்’ செயலியிலும் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முழு தடுப்பு சக்தி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தொற்று நோய் தடுப்புப் பிரிவு மூத்த மருத்துவர் சமிரன் பாண்டா கூறும்போது, ‘‘ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் கூட 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழு தடுப்பு சக்தி கிடைக்கும். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ என்று வலி யுறுத்தினார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in