ராணுவ தாக்குதலைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்துக்கு வந்த மியான்மர் நாட்டு மக்கள்

ராணுவ தாக்குதலைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்துக்கு வந்த மியான்மர் நாட்டு மக்கள்
Updated on
1 min read

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அந்நாட்டு குடிமக்கள் போராடி வருகின்றனர். இந்தியாவின் மிசோரம் எல்லையை ஒட்டிய பகுதியில் மியான்மர் ராணுவத் துக்கும் அந்நாட்டின் ஆயுதம் ஏந்திய மக்களுக்கும் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

வன்முறையில் இருந்து தப்பிக்க முயலும் மியான்மர் குடி மக்கள் மிசோரமுக்குள் நுழைந்து வருகின்றனர். கடந்த சில நாட் களாக மிசோரமில் சம்பாய் மற்றும் நதியால் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள் நுழைந்துள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

மிசோரம் மாநில உள்துறை அமைச்சர் லால் சாம்லியானா கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களில் மியான்மரில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மிசோரமுக்குள் நுழைந்த தாக கேள்விப்பட்டேன். ஆனால், தற்போது எத்தனை பேர் மிசோர முக்குள் நுழைந்துள்ளனர் என்ற சரியான புள்ளிவிவரம் என்னிடம் இல்லை. கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்ட கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான மியான்மர் மக்கள் மிசோரமுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in