

இந்திய சுற்றுலா துறையை மேம்படுத்த ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடவும் விற்பனை செய்யவும் இந்திய ரயில்வே முடிவு செய் திருக்கிறது. அதற்கான கொள்கை மற்றும் வழிமுறைகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
இந்திய சுற்றுலாத் துறையின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள இந்த முயற்சியை மேற் கொள்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்கவோ விலைக்கு வாங்கவோ முடியும்.
அவர்கள் ரயில் பெட்டிகளில் தாங்கள் விரும்பிய மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ரயில் பெட்டிகளைக் குத்தகைக்கு எடுக்க முடியும். ரயில் பெட்டி களின் ஆயுள் வரை குத்தகையை நீட்டிக்க முடியும்.
விளம்பரம் செய்யலாம்
அதேபோல், குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள் ரயில் பெட்டிக்குள் விளம்பரம் செய்துகொள்ளலாம்; பிராண்ட் பெயர் வைக்கலாம். பயண இடங்கள், பயண வழித் தடங்கள், கட்டணம் போன்றவற்றை அவர் களே முடிவு செய்யலாம்.
குறைந்தபட்சம் 16 பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.இதற்கான கொள்கை மற்றும் விதிமுறைகளை உருவாக்க நிர் வாக இயக்குநர் மட்டத்தில் குழு ஒன்றை ரயில்வே அமைச் சகம் அமைத்துள்ளது.