

கேரள மாநிலம் பாளா பகுதியைச் சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லரங்கத் அண்மையில்சர்ச்சில் பேசும்போது, "லவ் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத் ஆகிய இரண்டு வகையான ஜிகாத் இளைஞர்களை சீரழிக்கின்றன. முஸ்லிம் அல்லாத வர்களைக் கெடுக்க அவர்கள் பல்வேறு வகையான மருந்துகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்’’ என்றார்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறும்போது, “பிஷப் ஜோசப் இதுபோன்று பேசியிருக்கக்கூடாது. அவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். முதல்முறையாக கேரளாவில் போதைப்பொருள் ஜிகாத் என்ற வார்த்தை கேள்விப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டும் போதைப் பொருள் பிரச்சினை இல்லை.போதைப்பொருளைத் தடுப்பதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலகம் முழுவதுமே போதைப் பொருள் ஒழிய வேண்டும்” என்றார்.