பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ. 4,301 கோடி

பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ. 4,301 கோடி
Updated on
1 min read

ரயில்வே துறைக்கு பொது பட்ஜெட்டிலிருந்து ரூ.4,301 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்ததைக் காட்டிலும் 15.58% கூடுதலாகும்.

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசிடமிருந்து ரூ.3,721 கோடி வழங்கப்பட்டதாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட் ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ. 1,21,000 கோடிக்கான திட்டங்கள் குறித்து விவரித்தார். பட்ஜெட்டின் முக்கிய குறிக்கோளே முதலீடுகளை மேற் கொண்டு வருவாயை அதிகரிப்பது தான்.

ஒவ்வொரு திட்டப் பணி களுக்கும் உரிய நிதி கிடைப்பதை உறுதி செய்ய பட்ஜெட்டில் வழிவகை காணப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் ரூ.1,84,820 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இதில் பயணிகள் கட்டண வருவாய் 12.4 சதவீதம் அதிகரிக் கும் என்றும் அதன் மூலம் ரூ.51,012 கோடி கிடைக்கும் என்றும் பட்ஜெட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சரக்குப் போக்குவரத்து கணிச மாக உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. சரக்குப் போக்கு வரத்து மூலமான வருவாய் ரூ. 1,17,933 கோடியாக இருக்கும் என்றும் பிற இனங்கள் மூலமான வருமானம் ரூ. 6,185 கோடியாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in