

‘‘பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு கேட்டுக் கொண்டபடி, வேவு பார்த்து ரகசிய தகவல்களை பெற இந்திய ராணுவத்தினருக்கு வலைவீசினோம்’’ என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008, நவம் பரில் நடந்த தாக்குதலுக்கு மூளை யாக செயல்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி (55) தற்போது அமெரிக்க சிறையில் 35 ஆண்டு சிறை தண்ட னையை அனுபவித்து வருகிறார்.
இவ்வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள ஹெட்லி அமெரிக்கா வில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மும்பை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். நேற்று அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:
மும்பை தாக்குதல் நடந்த பின், லஷ்கர் தலைவர் லக்வி மற்றும் ஹபீஸ் சயீத் ஆகியோரிடம் பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருவது குறித்து என் சகாக் களிடம் விசாரித்தேன். அதற்கு, ‘‘லக்வி, சயீதுக்கு ஒன்றும் ஆகாது. விசாரணை எல்லாம் கண் துடைப்புதான்’’ என்று லஷ்கர் அமைப்பை சேர்ந்த சாஜித் மிர் தெரிவித்தார்.
அதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி பின்னர் லஷ்கர் மற்றும் அல் கய்தாவில் சேர்ந்து வேலை செய்த மேஜர் அப்துல் ரஹ்மான் பாஷாவும், ‘லக்வி, ஹபீஸ் சயீதுக்கு ஒன்றும் நடக்காது. பாகிஸ்தான் புலனாய்வு துறை விசாரணையால் அவர் களுக்கு எதிராக எதுவும் நடக் காது’’ என்றார்.
பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐஎஸ்ஐ.யை சேர்ந்த மேஜர் இக்பால் கேட்டுக் கொண்டபடி, மும்பை தாக்குதலுக்கு பின்னர் புனேவில் உள்ள இந்திய ராணுவ தெற்கு மண்டல தலைமையகத் துக்கு சென்றேன். பாகிஸ்தானுக் காக வேவு பார்த்து இந்திய ராணுவ ரகசியங்களை வழங்கு வதற்கு இந்திய ராணுவத்தில் ஆள் பிடிக்குமாறு என்னிடம் கூறினார். அதேபோல் புஷ்கர், கோவாவுக்கும் சென்றேன். அந்த 3 நகரங்களையும் வீடியோ எடுத்தேன்.
அதன்பின், 2009 ஜூலை, 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர், 11-ம் தேதி வரை நானும் சாஜித் மிர்ரும் இமெயில் மூலம் பல தகவல்களை பரிமாறிக் கொண்டோம்.
ஹபீஸ் சயீதை நானும் சாஜித் மிர்ரும், ‘வயதான அங்கிள்’ என்றுதான் அழைப்போம். லக்வியை ‘இளைய அங்கிள்’ என்போம். இதுதான் இமெயிலில் நாங்கள் பரிமாறி கொண்ட சங்கேத வார்த்தைகள்.
இவ்வாறு ஹெட்லி வாக்கு மூலம் அளித்துள்ளார்.