Published : 11 Sep 2021 04:12 PM
Last Updated : 11 Sep 2021 04:12 PM

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்தார்.

அங்கு ஆனந்தி பென் படேலுக்கு பிறகு அவர் முதல்வரானார். இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வழிநடத்திய கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய செயல்பாட்டுக்கு புதிய தலைமை தேவைப்படும். மக்களுக்கு சேவை செய்ய பாஜக எப்போதும் வாய்ப்பு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x