கண்ணய்யா, காலீத், அனிர்பனிடம் போலீஸார் கூட்டு விசாரணை

கண்ணய்யா, காலீத், அனிர்பனிடம் போலீஸார் கூட்டு விசாரணை
Updated on
1 min read

தேச துரோக வழக்கு தொடர்பாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா, உமர் காலீத் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய மூவரிடமும், டெல்லி போலீஸார் கூட்டாக விசாரணை நடத்தினர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் தீவிர வாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதர வாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேச விரோத வழக்கில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஏற் கெனவே கைது செய்யப்பட்ட நிலை யில், கடந்த 21-ம் தேதி சக மாணவர் கள் உமர் காலீத்தும், அனிர்பன் பட்டாச்சார்யாவும் போலீஸில் சரணடைந்தனர்.

இதையடுத்து மூன்று பேரிடமும் கூட்டாக விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித் ததை அடுத்து, நேற்று விசாரணை நடத்தப்பட்டது. தெற்கு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் போலீஸ் நிலை யத்தில் நேற்று அதிகாலை தொடங் கிய இந்த விசாரணையின் முதல் சுற்று, சுமார் ஐந்து மணி நேரம் வரை நீடித்தது.

முதல் சுற்று விசாரணையில், கண்ணய்யாவுடன் காலீத்தையும், அனிர்பனையும் தனித்தனியாக போலீஸார் விசாரணை நடத்தினர். இரண்டாம் சுற்றில் மூவரையும் ஒன்றாக அமரவைத்து நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளர் யார்? பங்கேற்ற வெளிநாட்டினர் யார்? நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது? என பல்வேறு கேள்விகளைக் கேட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in