Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM

மத்திய பிரதேசத்தில் கல்வீச்சு திருவிழாவில் 400 பேர் காயம்

சிந்த்வாரா

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கோத்மார் என்ற பெயரில் கல்வீச்சு திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின்போது, அங்குள்ள ஜாம் நதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொள்வது வழக்கம்.

அதன்படி, நேற்று நடைபெற்ற திருவிழாவில் மக்கள் கற்களால் தாக்கிக் கொண்டதில் 400 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த கோத்மார் திருவிழாவுக்கு சுவாரசியமிக்க பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜாம் நதியின் ஒருபுறம் அமைந்துள்ள பதூர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதன் மறுபுறம் உள்ள சாவர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவற்காக அவரை அழைத்துச் சென்றாராம். அப்போது அவர்களை தடுப்பதற்காக, சாவர்ஹான் கிராம மக்கள் அவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். அப்போது, அந்த காதல் ஜோடிகளை காப்பாற்றுவதற்காக பதூர்னா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பதிலுக்கு கல்வீசி அவர்களை ஊருக்கு அழைத்து வந்தனராம். இந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, அன்று முதல் இந்த கல்வீச்சு திருவிழா நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x