Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

விவசாயிகள் - மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா மாநிலம் கர்னாலில் விவசாயிகள் சார்பில் மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அடுத்து அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள்.படம்: பிடிஐ

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹரியாணாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வரு கின்றனர்.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங் களில் விவசாயிகள் தீவிரமாக இந்த போராட்டத்தை முன் னெடுத்து வருகின்றனர். விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து, டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது. முக்கியமாக ஹரியாணா எல்லைப் பகுதியில் விவசாயிகள் சாலை தடுப்புகளை அமைத்து அங்கேயே தங்கி உள்ளனர்.

இந்த விவசாய போராட்டத்தில் டெல்லி எல்லைப் பகுதியை தாண்டி தற்போது புதிய அடையாளமாக ஹரியாணா மாநிலத்தின் கர்னால் பகுதி மாறியுள்ளது.

இங்கு கடந்த 2 வாரமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆக. 28-ம் தேதி இங்கு நடந்த விவசாயிகள் போராட்டம் நாடு முழுக்க கவனத்தை ஈர்த்தது.

விவசாய சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வைத்து கர்னால் பகுதியில் உள்ள மினி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

பாரத் கிஸான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், யோகேந்திர யாதவ் போன்ற செயற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மத் திய அரசுக்கும், ஹரியாணா மாநில பாஜக அரசுக்கும் எதிராக விவ சாயிகள் கோஷம் எழுப்பினர்கள்.

மினி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற விவ சாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட விவ சாயிகளை கைது செய்தனர். இது மிகப்பெரிய அளவில் ப ரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் நேற்று முன்தினம் கர்னாலில் உள்ள மினி தலைமைச் செயலகத்தை மீண்டும் முற்றுகையிடச் சென் றனர். இதையடுத்து அங்கு செல்போன் சேவை, இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு வரை போன் சேவை துண்டிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ராகேஷ் டிகைத் தெரிவித்தார். தடியடி சம்பவத்துக்கு் காரணமான அதிகாரி ஆயுஷ் சின்ஹா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை மினி தலைமைச் செயலகத்தில் போராட்டத்தை தொடர்வோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ள னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x