Published : 08 Sep 2021 14:09 pm

Updated : 08 Sep 2021 14:41 pm

 

Published : 08 Sep 2021 02:09 PM
Last Updated : 08 Sep 2021 02:41 PM

கேரளாவில் நிபா வைரஸ்; 58 பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் கண்காணிப்பு

nipah-symptoms-rises

திருவனந்தபுரம்

கேரளாவில் நிபா வைரஸுக்கு சிறுவன் பலியாகியுள்ள நிலையில் தொடர்பில் இருந்த 58 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு குறையாதநிலையில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக அந்த சிறுவனுக்கு தொடர்ந்து அதிகமான அளவு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து, அந்த சிறுவனின் உடலில் இருந்து ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையில் அந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அந்த சிறுவன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

நிபா வைரஸ், பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவும். நிபா வைரஸ் உறுதியானதையடுத்து, அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:

நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நிபா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் 30 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை காரணமாக தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தடமறியும் முயற்சியும் நடந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!



Nipah symptoms risesகேரளாநிபா வைரஸ்கோழிக்கோடுமருத்துவமனைதிருவனந்தபுரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

cartoon

புதிய வைரஸ்!

கார்ட்டூன்
x