Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

மத்தியபிரதேச மாநிலத்தில் விளையும் சிவப்பு வெண்டைக்காயின் விலை கிலோ ரூ.800

போபால்

மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டம் கஜுரி கலன் பகுதியைச் சேர்ந்த விவசாயி மிஸ்ரிலால் ராஜ்புத். இவர் தனது தோட்டத்தில் சிவப்பு நிற வெண்டைக்காய் பயிர் விளைவித்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது: உத்தரபிரதேச மாநிலம்வாரணாசியிலுள்ள வேளாண்ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஒரு கிலோ சிவப்பு நிற வெண்டைக்காய் விதைகளை வாங்கி வந்து எனது தோட்டத்தில் விதைத்தேன். 40 நாட்களிலேயே செடிகள் வளர ஆரம்பித்துவிட்டன. வழக்கமாக பச்சை வெண்டைக்காய்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி உள்ளன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதால் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

ஆனால் இந்த வழக்கமான பச்சை நிற வெண்டைக்காயை விட சிவப்பு நிற வெண்டைக்காய்க்கு அதிக மவுசு உள்ளது. இதைச் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. மேலும் இதய நோய் உள்ளவர்கள், கொழுப்புப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக உள்ளது.

டெல்லி மார்க்கெட்டில் சிவப்பு நிற வெண்டைக்காய் கால் கிலோ ரூ.75 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. சில வணிக வளாகங்களில் (மால்கள்) ஒரு கிலோவெண்டைக்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.800 வரை விற்பனை யாகிறது. இதற்கு பூச்சி மருந்துகள் எதையும் தெளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x