டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சந்தித்துப் பேசினார்.
Updated on
1 min read

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநிலஆளுநர் பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது தமிழகம், பஞ்சாப், சண்டிகர் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in