

நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி சேவை தினமாக பாஜகவினரால் கொண் டாடப்படுகிறது.
இந்நிலையில், வரும் 17-ம்தேதி அன்று பிரதமரின் பிறந்தநாளை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாட பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க் கைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாக, 17-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ரத்த தான மற்றும் சுகாதார முகாம்களை நடத்தவும் பாஜகவினர் திட்ட மிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளை கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த பாஜக தேசியத் தலைவர் நட்டா அறிவுறுத்தியுள்ளார்.