

புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சட்டத் துறை அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உள்ள முகுல் ரோத்கி, மும்பை பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற வர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வாலிடம் ஜூனியராக பணி யாற்றியவர். இதற்கு முன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவி வகித்துள்ளார். ஆட்சி மாற்றத் தையடுத்து அட்டர்னி ஜெனரலாக இருந்த ஜி.இ.வாகன் வதி பதவியை ராஜினாமா செய்தார்.