பெங்களூருவில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்

பெங்களூருவில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்
Updated on
1 min read

பெங்களூரு மாநகராட்சி ஆணை யர் கவுரவ் குப்தா 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:

கரோனா இரண்டாவது அலை பெங்களூருவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால், மக்கள் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடுகின்றனர். எனவே பெங்களூருவில் இனி முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் குப்பை போடு வோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கரோனா நெருக்கடி காலத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதால் ஒரே நேரத்தில் பலருக்கு தொற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, இனி பொது இடங் களில் எச்சில் துப்புவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு செய்யவும் முடிவெடுத்துள்ளோம். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு சிறையும்,ரூ.1000 அபராதமாக செலுத்த நேரிடும்.

இவ்வாறு கவுரவ் குப்தா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in