

உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் சொந்த ஊரில் முக்கால்வாசி பேர் மின்சாரத்தை திருடி பயன்படுத்து கின்றனர். இந்த அதிர்ச்சி தக வலை மாநிலத்தில் மின்சாரம் விநியோகிக்கும் நிறுவன வட் டாரம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபுசிங் செய்தியாளர்களிடம் கூறியதா வது: ‘மின்சாரத் திருட்டை தடுப் பதில் எங்கள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வரின் உத்தரவுக்குப் பின் அரசியல் ஆதரவு எங்களுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. எனவே, ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் எட்டவா மாவட்டத்தில் களம் இறக்கி விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஒரே வாரத் தில் 12,000 புதிய நுகர்வோர் மின் விநியோகம் வேண்டி விண்ணப் பித்துள்ளனர். இது மாவட்டத்தில் மின்விநியோகம் பெற்று வருபவர் களில் பத்து சதவிகிதம் ஆகும்.
கண்காணிப்புக் குழுக்கள், முதல் மாவட்டமாக முலாயம் சிங்கின் சொந்த ஊரான எட்டவா வில் களம் இறங்குவதற்குக் காரணம், அங்கு வெறும் கால்வாசி பேர் மட்டுமே மின் இணைப்பு பெற் றுள்ளனர்.
மீதம் உள்ள அனை வரும் மின்சாரத்தை திருடியே பயன்பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இங்குள்ள சுமார் நான்கரை லட்சம் பேரில் 1.1 லட்சம் பேர்தான் மின்நுகர்வோர் .
உத்தரப்பிரதேசத்தில் மின் சாரம் விநியோகிக்கப்படும் நேரத் தைவிட மின்வெட்டு நிலவும் நேரம் அதிகம் என்பது பரவலான கருத்து. இந்த நிலை கோடையில் அதிகம் என்பதால், முதல்வர் அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இதை சமாளிக்க அவரது சார்பில் மின்விநியோக நிறுவனங்களுக்கு ஒரு சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மின்சாரத் திருட்டை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மின்விநியோகத்தை சீரமைக்க உதவும் எனவும் அந்த சுற்றறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை அடுத்து, மாநிலத்தின் மின்விநியோக நிறுவனங்களில் ஒன்றான தட்சினாஞ்சல் மின் விநியோக நிறுவனம் அதிரடி யாக மின் திருட்டு தடுப்பு நடவடிக் கையில் இறங்கியுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களின் வட்டாரம் கூறு கையில், ‘உபியில் மின்வெட்டுக்கு முக்கியக் காரணமே மின்திருட்டு தான். டெல்லியை ஒட்டியுள்ள உ.பி. மேற்குப் பகுதி மாவட்டங் களில்தான் திருட்டு மிகவும் அதிகம்.
மின்சார ஊழியர்கள் ஒரு வீட்டிற்கு மாதம் ரூபாய் பத்து பெற்று கொண்டு, மின் திருட்டை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
சாலை ஓரம் உள்ள கடை களுக்கு மின்கம்பங்களில் வயர் களை கொக்கிகளாக போட்டு மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் ‘தாதா’ கும்பல் அல்லது அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரம் மேலும் தெரிவிக்கிறது.