Published : 04 Sep 2021 02:13 PM
Last Updated : 04 Sep 2021 02:13 PM

காவல்துறை பிம்பத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது; ஏன் என்று தெரியவில்லை: அமித் ஷா ஆதங்கம்

புதுடெல்லி

அரசு நிர்வாகத்தில் மிகவும் கடினமான பணி போலீஸ் பணி தான், ஆனால் காவல்துறையின் பிம்பத்தை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 51 வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

ஜனநாயகம் நமது நாட்டின் இயல்பு. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகே நாடு சுதந்திரமடைந்தது, 1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகுதான் ஜனநாயகம் வந்தது என்று யாராவது சொன்னால் அது தவறு. ஜனநாயகம் நமது நாட்டின் இயல்பு.

முன்பே, இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறையில் இருந்த பரவலாக்கப்பட்ட அமைப்புகள் இருந்தன. முன்பு கிராமங்களில் பஞ்ச பரமேஸ்வர் இருந்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவாரகாவில் யாதவர்களின் குடியரசு இருந்தது. பிஹாரிலும் குடியரசுகள் இருந்துள்ளன. எனவே ஜனநாயகம் நமது தேசத்தின் இயல்பு.

காவல்துறையின் பிம்பத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகிறது.

காவல்துறை தொடர்பாக வேறு சில நல்ல சம்பவங்கள் நடந்தால் அதை பற்றி பேசுவதில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முழு அரசாங்க அமைப்பிலும் மிகவும் கடினமான வேலை போலீஸ் பணி மட்டுமே.

இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x