லஷ்கர் தற்கொலைப் படை தீவிரவாதிதான் இஷ்ரத் ஜஹான்: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்

லஷ்கர் தற்கொலைப் படை தீவிரவாதிதான் இஷ்ரத் ஜஹான்: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
Updated on
2 min read

குஜராத் போலீஸாரால் என்கவுன்ட் டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி என டேவிட் ஹெட்லி மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் தொடர்பாக தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் இருந்தபடி, வீடியோ மூலம் மும்பை சிறப்பு நீதிபதி ஜி.ஏ. சனாப்பிடம் 3-வது நாளாக நேற்று சாட்சியம் அளித்தார். முன்னதாக, நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறால் சாட்சியம் ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதியிடம் ஹெட்லி சாட்சியம் அளித்தபோது கூறியதாவது:

இஸ்ரத் ஜஹான், லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப்படை தீவிரவாதியாக இருந்தார். இது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா தலைவர் என்னிடம் கூறினார். இந்தியாவில் முஸாம்மில் பட் என்ற லஷ்கர் இயக்க உறுப்பினரால் மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதில், பெண் தற்கொலைப்படை தீவிர வாதியான இஸ்ரத் ஜஹான் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக எனக்குத் தெரிவிக்கப் பட்டது.

லஷ்கர் இ தொய்பாவில் பெண் கள் பிரிவு இருந்தது. அபு அய்மா னின் தாய் தலைமையில் ஒரு பிரிவு செயல்பட்டது.

சஜித் மிர்ருக்கு முன்பு முஸாம் மில் பட்தான், எனது குழுவுக்கு தலைவராக இருந்தார். அபு துஜுநா என்பவர்தான் முஸாம்மில்லுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இந்திய படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக முஸாம் மில் ஒருமுறை காஷ்மீர் வந்தார்.

இந்தியாவில் எனது அலுவலகத் துக்கு வங்கிக் கணக்கு தொடங்கு வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துவிட்டது.

2006 செப்டம்பரில் இந்தியா வுக்கு வருவதற்கு முன்பாக, ஐஎஸ்ஐ அதிகாரி மேஜர் இக்பா லிடம் இருந்து 25,000 அமெரிக்க டாலர்கள் பெற்றேன். மேலும், ரூ.40 ஆயிரம் பாகிஸ்தான் பணத்தை லஷ்கர் இ தொய்பாவின் சஜித் மிர்ரிடம் இருந்து 2008 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் பெற்றேன்.

மேஜர் இக்பால் அவ்வப்போது எனக்கு பணம் அனுப்புவார். மேஜர் இக்பால் இந்திய பணத்தையும் 2008-ல் ஓரிருமுறை கொடுத்தார்.

தவிர, ஐஎஸ்ஐ அதிகாரி அப்துல் ரெஹ்மான் பாஷா ரூ.80 ஆயிரம் அளித்தார்.

லஷ்கர் இ தொய்பா உத்தரவின் பேரில், 2006-க்குப் பிறகு வேவு பார்ப்பதற்காக இந்தியா வரும்போ தெல்லாம், சிகாகோவில் இருக்கும் என் கூட்டாளி தஹாவுர் ராணா பணம் கொடுப்பார்.

குடியுரிமை ஆலோசனை அலு வலகத்தை இந்தியாவில் திறப்பது என்பது என் யோசனை. அது எனக்கு பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதினேன். மேஜர் இக்பா லும், தீவிரவாதி சஜித் மிர்ரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

இந்தியாவில் நான் வேவுப் பணி யில் ஈடுபட வேண்டும் என மேஜர் இக்பால் என்னிடம் கூறியதை, ராணாவிடம் தெரிவித்திருக்கிறேன். எனது செயல்பாடுகளுக்கு ஒத் துழைக்க ராணா ஆர்வம் காட்ட வில்லை என்றால், பாகிஸ்தான் மீதான தேசப்பற்றைக் காட்டி, ஈர்க்க வேண்டும் என இக்பால் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், ராணா எனக்காக இந்தியா செல்வதற்கு தயாராகவே இருந்தார். தாக்குதலுக்கு முன்பாக ராணா மும்பை வந்தார். அவருக்கு அபாயம் நேரலாம் என்பதால் தாக்குதல் நடப்பதற்கு முன்பு, இந்தியாவை விட்டு வெளியேறி விடும்படி ராணாவுக்கு அறிவுரை கூறினேன்.

இந்தியாவில் செயல்படும் எங்கள் அலுவலகத்துக்காக வங்கிக் கணக்கு திறக்க அனுமதி கோரும் விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கும் படி, ரேமண்ட் சாண்டர்ஸிடம் ராணா கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு, ஹெட்லி தெரி வித்தார்.

இஸ்ரத் ஜஹான் சர்ச்சை

கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி ஆமதாபாத்தில், இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷாய்க் (எ) பிரணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா, ஜீசன் ஜோஹர் ஆகியோர் குஜராத் போலீஸாரால் என்கவுன்ட் டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட நால் வரும் லஷ்கர் இ தொய்பா தீவிர வாதிகள் எனவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவர்கள் கொல்ல திட்டமிட்டதாகவும் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால், இது போலி என் கவுன்டர் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்து பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத் உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. அவர்களிட மிருந்து சிபிஐ வழக்கை எடுத்துக் கொண்டது. கடந்த 2013 ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, அந்த என்கவுன்ட்டர் போலி யானது என தெரிவித்தது. நகர குற்றப் பிரிவு போலீஸார் மற்றும் துணை புலனாய்வு அமைப்பு (எஸ்ஐபி) ஆகியோர் இணைந்து இந்த போலி என்கவுன்ட்டரை நிகழ்த் தியதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பாவின் தற் கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி என டேவிட் ஹெட்லி கூறியிருப்பது புது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in