Published : 04 Sep 2021 03:13 AM
Last Updated : 04 Sep 2021 03:13 AM

பல இக்கட்டான தருணங்களில் இந்தியா - ரஷ்யா இடையே தொடரும் நட்புறவு: கிழக்கு பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி புகழாரம்

இந்தியா - ரஷ்யா இடையிலான நட்புறவு பல இக்கட்டான தருணங் களில் வெளிப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆண்டுதோறும் கிழக்கு பொரு ளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும். நேற்று நடைபெற்ற 6-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு (இஇஎப்) மாநாட்டில் காணொலி வாயிலாகபங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

இரு நாடுகளிடையிலான நட்புறவு எரிசக்தி துறையில் சர்வதேச அளவில் ஸ்திரமான நிலையை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளிடையிலான நட்புறவு மிகவும் வலுவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியதற்கு சமீபத்திய உதாரணம் கரோனா கால கட்டமாகும். மருந்து தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் நட்புடன் செயல்பட்டுள்ளன. எரிசக்தித் துறையும் மிக முக்கியமான துறை யாகும். இந்தத் துறையிலும் இரு நாடுகளிடையிலான நட்புறவின் பலம் வெளிப்படும். இதன் மூலமாகத்தான் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரமான சூழல் நிலவுகிறது.

இந்திய வரலாறு மற்றும் நாகரிக வளர்ச்சியில் சங்கமம் என்ற வார்த்தைக்கு சிறப்பு அர்த்தம் உள்ளது. ஒன்றாக இணைதல் அல்லது ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைவதை சங்கமம் என்று குறிப்பிடுவர். அதைப் போல எனது பார்வையில் சங்கமம் என்பது ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் விளாடிவோஸ்டோக் சங்கமமாகத் திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். கடந்த 2019 மாநாட்டில் பிரதமர்மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்தியாவில் தொழில்நுட்ப வல்லுநர்களும், மனித வளமும் உள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அதிக கனிமவளங்கள் உள்ளன. இவைஇரண்டும் சேர்வது இருதரப்பின ருக்கும் பயனளிக்கும் என்றுஅப்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

மாநாட்டில் பங்கேற்க 5 நாள் பயணமாக மத்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ரஷ்யா சென்றுள்ளார். தனது பயணத்தின் போது அவர் ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் நிகோலாய் ஷுல்கினோவுடன் ஆலோசனை நடத்துவார்.

எரிசக்தித் துறையில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மிக அதிக அளவில் ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்களின் முதலீடு 1,600 கோடி டாலராக இருக்கும். குறிப்பாக எண்ணெய் வளங்கள் உள்ள சைபீரியா உள்ளிட்ட பகுதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஷாக்லைன், வான்கோர், டாஸ்-யுரியாக் உள்ளிட்ட பகுதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x