

உத்தரபிரதேசத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனை கள் மற்றும் அரசு சுகாதார மையங்களில் வைரஸ் காய்ச் சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் பிரோசா பாத் மாவட்டம் மோசமாக பாதிக் கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளனர்.
இதையும் சேர்த்து கடந்த 3 வாரங்களில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 50 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்பாத் மற்றும் முசாபர்நகர் ஆகிய இடங்களிலும் அரசு சுகாதார மையங்களிலும் வைரஸ்காய்ச்சலுக்கு நூற்றுக்கணக் கானோர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீரட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் காய்ச்சலுடன் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதாக மீரட் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் தெரிவித்தார். மெயின்புரியில் 8 பேரும் மதுராவில் 13 பேரும் காய்ச்சலால் இறந்துள்ளனர்.
பிரோசாபாத் மருத்துவக் கல்லூரியில் 345 குழந்தைகள் உட்பட 400 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதையடுத்து அனைத்து மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்றும் பிரோசாபாத் மாவட்டத்துக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் அனுப்பப் பட்டுள்ளதாகவும் உத்தர பிரதேச சுகாதாரத் துறை இயக்குநர் வேத் விராட் சிங் தெரிவித்தார்.