Published : 23 Jun 2014 09:18 AM
Last Updated : 23 Jun 2014 09:18 AM

குறைந்த விலை ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தயார்: டி.ஆர்.டி.ஓ. தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டி

ஆயுத ஏற்றுமதிக்கு முக்கியத் துவம் தர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வரு கிறார். இந்நிலையில், மிகவும் குறைந்த விலையில் போர் விமா னங்களையும் ஏவுகணைகளை யும் ஏற்றுமதி செய்ய நம்மால் முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனா உள்ளிட்ட நாடுகளை விட மிகக் குறைந்த விலையில் ஆயுதங்களை நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும்.

ஆயுதங்கள் ஏற்றுமதி தொடர் பான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். முதல் கட்டமாக ஒற்றைச்சாளர முறையில் நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று டி.ஆர்.டி.ஓ. ஆலோசனை அளித்துள்ளது.

எந்த நாட்டிற்கு எந்த வகை யான ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டும். நாம் அளிக்கும் ஆயுதங்களை அவை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியெல்லாம் அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும். அதன்படிதான் ஆயுத ஏற்று மதியை மேற்கொள்ள வேண்டி யிருக்கும். தேஜா போர் விமானங் கள், ஆகாஷ், பிரஹார், பிரமோஸ் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய முடியும்.

சவுதி அரேபியாவுக்கு சீனா விற்பனை செய்து வரும் தொலை தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளின் விலையில் 4-ல் ஒரு பங்கு மட்டுமே இந்திய ஏவுகணைகளை வாங்குவதற்கு செலவிட வேண்டியிருக்கும்.

இந்தியாவில் தயாராகும் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கு வதற்கு பிற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன” என்று அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியா பெரிய அளவில் ஆயுத ஏற்றுமதியில் ஈடு பட்டதில்லை. நட்பு நாடுகளுக்கு துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள், சிறிய கப்பல்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

அதே சமயம், மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை இறக்கு மதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் மொத்த ஆயுதத் தேவையில் 65 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுபவைதான் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x