எந்த வடிவில் இருந்தாலும் அப்பளத்துக்கு ஜிஎஸ்டி இல்லை: மத்திய மறைமுக வரிகள் வாரியம் விளக்கம்

வெவ்வேறு வடிவ அப்பளங்கள்.
வெவ்வேறு வடிவ அப்பளங்கள்.
Updated on
1 min read

அப்பளங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து அவற்றுக்கு வரி விலக்கு உண்டு என மத்திய மறைமுக வரிகள் வாரியம் கூறியுள்ளது.

வட்ட வடிவ அப்பளங்களுக்கு ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் சதுர வடிவ அப்பளங்களுக்கு வரி விலக்கு இல்லை. யாராவது நல்ல பட்டய கணக்காளர் இதில் உள்ள தர்க்கத்தைப் புரிய வைத்தால் நல்லது என்று ஆர்பிஜி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இந்தத் தகவலை யார் தெரிவித்தது என்று கேட்டதற்கு நண்பர் ஒருவர் கூறியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு மத்திய மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி சுற்றறிக்கை எண்2/2017 சிடி(ஆர்) என்ற வழிகாட்டுதல் வரைவில் எண் 96ல் அப்பளங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் வடிவங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அப்பளங்கள் எந்த வடிவத்தில் எந்த பெயரில் இருந்தாலும் அவற்றுக்கு ஜிஎஸ்டி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in