இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு 3.5 லட்சம் பேர் பலி: ஆய்வு அமைப்பு தகவல்

இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு 3.5 லட்சம் பேர் பலி: ஆய்வு அமைப்பு தகவல்
Updated on
1 min read

“இந்தியாவில் புற்று நோய்க்கு ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் பேர் பலியாகின்றனர்” என்று ஆய்வு அமைப்பு ஒன்று கூறுகிறது.

புகையிலை பயன்படுத்துதல், புகைபிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் புற்றுநோய் உண்டா கிறது. இவற்றை தவிர்த்து முறையான வாழ்க்கையை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார நிறு வனத்தின் 2015-ம் ஆண்டுக்கான உலக புற்றுநோய் அறிக்கையை சுட்டிக் காட்டி, ஐஎஸ்சிஆர் என்ற ஆய்வு அமைப்பு கூறியிருப்பதாவது:

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 3.5 லட்சம் இறக்கின்றனர். அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

புற்றுநோய்க்கு தரமான சிகிச்சை அளிப்பதிலும் அந்த நோயை தடுப்பதிலும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் புற்றுநோய் தொடர்பான ஆய்வுப் பணியில் முதலீடு செய்யப்படுவதும் அவசியம்.

இவ்வாறு அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in