

மத்திய பிரதேச விவசாயியின் குவாரியில் கடந்த 2 ஆண்டுகளில் 6-வது முறையாக விலைஉயர்ந்த வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் மஜும்தார். அந்த மாவட்டத்தின் ஜாரூவாபூர் கிராமத்தில் அரசு நிலத்தை அவர் குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்தி வருகிறார். அங்கு நேற்று முன்தினம் 6.47 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டது.
அரசின் வைரம் பொறுப்பு அலுவலர் நுதன் ஜெயினிடம் விவசாயி பிரகாஷ், வைரத்தை ஒப்படைத்தார். சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைரம், விரைவில் ஏலம் விடப்பட இருக்கிறது.
இதுகுறித்து விவசாயி பிரகாஷ் மஜும்தார் கூறும்போது, "நானும் 4 நண்பர்களும் சேர்ந்து குவாரியை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு 7.44 காரட் வைரம் கிடைத்தது. அடுத்தடுத்து 2.4 காரட் கொண்ட 2 வைரங்கள் கிடைத்தன. தற்போது 6.47 காரட் வைரம் கிடைத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 6 வைரங் கள் கிடைத்திருக்கின்றன. தற் போது ஏலத்தில் விடப்படும் வைரத்தின் மூலம் பெறும் தொகையைநண்பர்களோடு பகிர்ந்து கொள்வேன். எனக்கு கிடைக்கும் தொகையை பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக செலவிடுவேன்" என்று தெரிவித்தார். -பிடிஐ