ஜேஎன்யூ-வில் ஆணுறைகள்- கட்சி மீதான கலாய்ப்புக்கு வித்திட்ட பாஜக எம்எல்ஏ கருத்து

ஜேஎன்யூ-வில் ஆணுறைகள்- கட்சி மீதான கலாய்ப்புக்கு வித்திட்ட பாஜக எம்எல்ஏ கருத்து
Updated on
1 min read

"ஜேஎன்யூ வளாகத்தில் பாலியல் செயல்கள் நடைபெறுகின்றன. 3,000 பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்ற பாஜக எம்.எல்.ஏ.கியான்தேவ் அகுஜாவின் கருத்தை ஒட்டி ட்விட்டரில் பாஜக எதிர்ப்பு ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.> #BJPCountsCondoms என்பதுதான் அந்த ஹேஷ்டேக்.

ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.கியான்தேவ் அகுஜா, "ஜேஎன்யூ வளாகத்தில் பாலியல் செயல், மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிகரெட் துண்டுகள், 4,000 பீடி துண்டுகள், 50 ஆயிரம் எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 3,000 பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட 500 கருத்தடை ஊசிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன" எனக் கூறியிருந்தார்.

நினைத்தது ஒன்று.. நடந்தது வேறு:

ஜேஎன்யூ மாணவர்கள் கருத்துச் சுதந்திரதத்தை பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக சாடி வந்த நிலையில், தனது புள்ளிவிவரம் ஜேஎன்யூ மாணவர்கள் மீது விமர்சனங்களை தூண்டும் என எதிர்பார்த்தே அகுஜா கூறிய கருத்துகள் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன.

#BJPCountsCondoms ஹேஷ்டேக்கின் கீழ் பலரும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கிலும் #BJPCountsCondoms தொடர்பான மீம்கள் வலம் வருகின்றன.

அமித் ஷா காட்டம்

இதற்கிடையில் பொறுப்பற்ற கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தியதற்காக கியான்தேவ் அகுஜாவுக்கு டெல்லி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டரில் #BJPCountsCondoms ஹேஷ்டேக் டிரெண்டாவதால் அமித்ஷா காட்டம் அடைந்திருப்பதாகவும் டெல்லி பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in