

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை நாளை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) சுவாமி பிரபுபாதா நிறுவினார். உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்பி வரும் இஸ்கான், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர இலக்கிய நூல்களை 89 மொழிகளில் அமைப்பு மொழிபெயர்த்துள்ளது.
வேத இலக்கிய நூல்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.சுவாமி பிரபுபாதா சுமார் 100 கோயில்களை நிறுவியுள்ளதுடன், உலகிற்கு பக்தி பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது 125 -வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 125 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டு, நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கிறார். மத்திய கலாச்சார அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.