

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) விவகாரத்தில் அதன் ஆய்வு மாணவர் உமர் காலீத் உட்பட 3 பேரை டெல்லி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாள் கடந்த 9 ஆம் தேதி ஜேஎன்யூ வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைதான மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமாருடன் சேர்த்து 7 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸாரால் தேடப்பட்டு வரும் இந்த ஆறு பேரில் ஒருவராக மாணவர் காலீத் இடம் பெற்றுள்ளார். இவர் ஜேஎன்யூவின் சமூகவியல் துறையில் ஜார்க்கண்ட் பழங் குடிகள் தொடர்பாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ. மற்றும் எம்.பில். பட்டம் பெற்றவரான காலீத், 2011-ல் தொடங்கப்பட்ட ‘வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா’ எனும் அரசியல் கட்சியின் தலைவரான எஸ்.க்யூ.ஆர்.இலியாஸின் மகன் ஆவார்.
காலீத், அப்சல் குரு நிகழ்ச்சி யின் முக்கிய அமைப்பாளராக இருந்ததாகவும், அவருக்கு பாகிஸ் தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் டெல்லி உளவு போலீஸார், மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு பக்கங்களில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை யில், பிப்ரவரி 3 முதல் 9 வரை காலீத்துக்கு ஜம்மு-காஷ்மீர், வங்க தேசம் மற்றும் அரபு நாடுகளில் இருந்து சுமார் 800 முறை தொலை பேசியில் பேசப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஜேஎன்யூவில் நடந்த அப்சல் குரு நினைவு தினத்தை நாட்டின் 18 வேறுபல பல்கலைக்கழகங் களிலும் காலீத் ஒரே சமயத்தில் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடந்த அன்று சில தொலைக்காட்சி செய்தி சேனல் களின் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொண்ட காலீத், அதற்கு பின் தலைமறைவாக உள்ளார். இவரு டன் தலைமறைவாக உள்ளவர் பட்டியலில் டெல்லியின் அம்பேத் கர் பல்கலைழகத்தின் தற்காலிக உதவி பேராசிரியரான போனோ ஜோதிஸ்னா லஹிரி உட்பட 3 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் களுடன் நேரடியாகவும், மறை முகமாகவும் சம்மந்தப்பட்டவர்கள் என மேலும் 20 மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.