

மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
16-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "16-வது மக்களவையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தங்கள் வாக்குகளை வாரி வழங்கி மக்கள் பொதுப் பிரதிநிதிகளை ஆசிர்வதித்துள்ளனர்.
இந்திய தேசத்தின் சாமானிய மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.