பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைப்பு
Updated on
1 min read

பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட, டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதன் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பின் படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.59.95-லிருந்து ரூ.59.62-ஆக குறைந்துள்ளது.

மாறாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.44.68 என்பதற்குப் பதிலாக ரூ.44.96-ஆக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதி கடந்த முறை விலை குறைக்கப்பட்ட போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 4 மற்றும் 3 காசுகள் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.32 காசுகள் குறைக்கப்பட்டு, டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in