மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பள்ளி ஒன்றின் உடற்கல்வி ஆசிரியர் 6 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த தகவல்களால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளி பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர்.

மேடக் மாவட்டத்தின் அக்பர்பேட்டில் உள்ள விகாஸ் உயர்நிலைப்பள்ளியில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது பள்ளியில் உடற்கல்வி ஆசியரியராக பணியாற்றி வருகிறார் குமார். இவர் கடந்த சில நாட்களாக சம்பந்தப்பட்ட 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தச் சிறுமி தன் பெற்றோரிடம் நேற்று இரவு கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் காலையில் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் பள்ளி வளாகத்தை சூறையாடினர், பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பள்ளி பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இதனையடுத்து பள்ளிக்கு போலீஸார் விரைந்து வந்து நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உடற்கல்வி ஆசிரியர் குமார் தலைமறைவாகியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in