

எண்ணிலடங்காத இந்தியர்களுக்கு நிதி மேம்பாட்டையும் ஜன்தன் யோஜனா திட்டம் உறுதி செய்துள்ளதுடன் வெளிப்படைத்தன்மைக்கு உதவிகரமாக இருந்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் 43.04 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கும், ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகையும் இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றி அடைவதற்காகப் பணியாற்றிய அனைவரது முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை என்றென்றும் மாற்றியமைத்த முன்முயற்சியான பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எண்ணிலடங்காத இந்தியர்களுக்கு நிதி , மற்றும் கண்ணியமான வாழ்க்கையுடன் அவர்களது மேம்பாட்டையும் இது உறுதி செய்துள்ளது. ஜன்தன் யோஜனா திட்டம், வெளிப்படைத்தன்மைக்கு மேலும் உதவிகரமாக இருந்துள்ளது.
பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றியடைவதற்காகப் பணியாற்றிய அனைவரது தளர்வறியாத முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். இந்திய மக்களின் மேம்பட்ட வாழ்க்கை தரத்தை அவர்களது முயற்சிகள் உறுதி செய்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.