

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,759 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் குறையாத தொற்றே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 31,374 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். 509 பேர் தொற்றுக்கு பலியாகினர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 46,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவில் இருந்து 3,18,52,802 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தி்ல் 31,374 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,59,775 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,37,370 என்றளவில் உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை62,29,89,134 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,03,35,290 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து 30,000த்தைக் கடந்து பாதிப்பு:
கேரளாவில் 3வது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 32,801 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,70,703 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32,801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஒரே நாளில் கரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,313 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.