Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் வளாகம் புதுப்பிப்பு: பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

சுதந்திரப் போராட்ட காலத்தில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜாலியன்வாலா பாக் பூங்காவில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் கூடியிருந்தனர். அவர்கள் மீதுமுன்னறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டயர் என்பவர் தலைமையிலான ராணுவத்தினர் 1650 ரவுண்டு துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர்.

இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று பதிவானது. இந்த படுகொலையில் இறந்தவர்கள் சுமார் 379 பேர் எனத் தெரிய வந்துள்ளது. இப்படுகொலையில்இறந்த இந்திய விடுதலை தியாகிகளை நினைவுகூரும் வகையில்இந்தப் பூங்காவை 1951-ஆம்ஆண்டு இந்திய அரசு தேசியநினைவுச் சின்னமாக அறிவித்தது.இறந்த தியாகிகளுக்கு இந்தப்பூங்காவில் நினைவுச் சின்னமும் எழுப்பியுள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தை மத்திய அரசு புதுப்பித்துள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு காணொலி மூலம் அர்ப்பணித்து வைக்கவுள்ளார்.

மேலும் ஜாலியன்வாலா பாக் நினைவு அறக்கட்டளை தலைவராகவும் பிரதமர் உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்னூர், மத்திய அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர்.

ஜாலியன்வாலா பாக் துயர சம்பவம் நடந்து 102 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் புதுப்பிக்கப்பட்டுள் ளன. மேலும் பூங்காவின் உள்ளேதாமரைக் குளம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.25 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கவுள்ளார். நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வளாகத்தை மேம்படுத்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சியின் போது விளக்கப்பட உள்ளது.

பூங்காவில் உள்ளே பயன் பாட்டில் இல்லாத மற்றும் அதிகம் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை சீரமைத்து 4 அருங்காட்சியக காட்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் பஞ்சாபில் நடை பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை முப்பரிமாண முறையில் இந்த கூடங்கள் காட்சிப்படுத்துவதோடு, கலை மற்றும் சிற்பவேலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும்,1919 ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகளை காண்பிக்கும் ஒலி-ஒளி காட்சியும் இடம்பெறும்.

பூங்கா முழுவதும் ஒளி, ஒலி வசதிகள் உள்ளிட்ட புதிய மற்றும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x