

ஆந்திராவில் கடந்த 3 மாதங் களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அனைவருக்கும் மின் கட்டணம் அதிக அளவில் வருவ தாக புகார்கள் எழுந்துள்ளன. எனினும் மின் கட்டண உயர்வு குறித்து அந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளும் சரிவர பதில் கூற மறுக்கின்றனர்.
சில மாவட்டங்களில் 2 பல்பு, ஒரு மின் விசிறியை கொண் டிருக்கும் குடிசை வீடுகளுக்கு கூட லட்சக்கணக்கில் மின் கட்டணம் வந்திருக்கிறது.
ஆனால், ‘‘குறைந்தபட்சம் ரூ. 56 ஆயிரமாவது கட்டுங்கள்’’ என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.