

இந்தியாவில் 50 சதவீத மக்க ளுக்கு முதல் டோஸ் கரோனா தடுப்பூசி போட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,658 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 44,658 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 30,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 39 லட்சத்து 13,506 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே தற்போது கேரளாவில்தான் கரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று அதிகரித்து வருவதால் கேரள மாநில அரசால் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர்.
கரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,108 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 145 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 449 பேர் இறந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வைரஸ் தொற்று காரணமாக டெல்லியில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் 45 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தினசரி கரோனா தொற்று தொடர்ந்து 28 நாட்களாக 3 சதவீதத்துக்கு கீழ் உள்ளது. தற்போது 2.10 சதவீதமே காணப்படுகிறது. தேசிய அளவில்கரோனா தொற்றுக்கு குணமடைவோர் 97.60 சதவீதமாக உள்ளது. மேலும், கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகா தாரத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடு முழுவதும் 50% மக்களுக்கு முதல்டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது இதன்மூலம் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் பணி தொடரட்டும் இந்தியா. கரோனாவை எதிர்த்து போரிடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார். -பிடிஐ