

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஸ்மிருதி இரானி, ஜேஎன்யூ மாணவர்கள் துர்க்கைக்கு எதிராக வெளியிட்ட துண்டறிக்கை ஒன்றை அவையில் படித்து, காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்தார்.
இதுதொடர்பாக மாநிலங் களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, அவை யில் ஒழுங்கு மீறல் பிரச்சினை எழுப்பினார். அவையில் குறிப் பிட்ட மதத்தைப் புண்படுத்தும் எதையும் பேசக் கூடாது என்ற விதிமுறையைக் குறிப்பிட்ட அவர், அவைக்கு வெளியே மத பிரபலம் அல்லது தெய்வ உருவச் சிலைக்கு எதிராக கூறப்பட்ட விமர் சனத்தை ஸ்மிருதி படித்ததாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. கே.சி. தியாகி உள்ளிட்டோர் இக் கருத்தை ஆமோதித்து, ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப் புக் கோர வேண்டும் என்றனர்.
ஆனால், நானும் இந்துதான், துர்க்கையை வழிபடுபவள்தான். ஜேஎன்யூவின் அதிகாரப்பூர்வ ஆவணத்தைத்தான் படித்தேன் என்று ஸ்மிருதி கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “இது மிகவும் தீவிரமான பிரச்சினை. நேற்று பேசியதற்காக அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ஒவ்வொரு அமர்விலும் காங்கிரஸ் ஏதாவது பிரச் சினையை கிளப்பி அவை அலுவல்கள் நடைபெறாமல் தடுக்கிறது. தேசவிரோத நட வடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு ராகுல் ஆதரவு தெரிவித்ததை விமர்சனம் செய்ததற்காகவே, காங்கிரஸ் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது” என்றார்.
இருதரப்பிலும் அனல் பறக்க, அவை துணைத் தலைவர் குரியன், “அவையில் மத நம்பிக் கைகளுக்கு எதிராக பேசப் பட்டிருந்தால் அவைக் குறிப்பி லிருந்து நீக்கப்படும்” என உறுதி யளித்தார்.