

மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேரளாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பொய்யான தகவல்கள் மூலம் கரோனா பாதிப்பை மூடிமறைக்க மாநில அரசு முயற்சிக்கிறது.
ஏற்கெனவே கரோனா பாதிப்பின்போது இருந்ததைவிட இப்போது ஒரு கரோனா நோயாளி மூலம் 1.5 சதவீதம் அதிகமாக மற்றவர்களுக்கு பரவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கரோனா தொற்றில் இருந்து மக்களை்க் காப்பதில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு தோல்விஅடைந்து விட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களும் வரும் காலத்தில் இதேபோன்ற நிலைமையை சந்திக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.