

உலகின் பாதுகாப்பான நகரங்களில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி, மும்பை முதல் 50 நகரங்களில் இடம் பிடித்தன.
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'தி எக்னாமிஸ்ட் குரூப்' ஊடக நிறுவனத்தின் புலனாய்வு பிரிவு சார்பில் ஆண்டுதோறும் உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி 2021-ம் ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகன் முதலிடம் பிடித்தது. கனடாவின் டொராண்டோ, சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 12-வது இடம் கிடைத்தது.
பிரிட்டன் தலைநகர் லண்டன் 15-வது இடம், சீன தலைநகர் பெய்ஜிங் 36-வது இடம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 38-வது இடத்தைப் பெற்றன. இந்திய தலைநகர் டெல்லி 48-வது இடத்தையும், வர்த்தக நகரான மும்பை 50-வது இடத்திலும் உள்ளன.