

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சிறார் நீதி சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் 18 வயது நிரம்பாத குற்றவாளி ஒருவர் தண்டிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப் பட்டிருந்தார். அவர் கடந்த டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார். பாலி யல் பலாத்காரம் உள்ளிட்ட வன் கொடுமைகளில் ஈடுபடுவோரை குழந்தையாக கருதக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புதிய சிறார் நீதிச்சட்டம் 2015 கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இச்சட் டத்திற்கு கடந்த 4-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது.
புதிய சிறார் நீதி சட்டத்தின் பிரிவு 15-ன் படி, பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடு வோர் 16 முதல் 18 வயதில் இருந் தால், அவர்களிடம் சிறார் நீதி வாரியம் விசாரணை நடத்த வேண்டும். பின்னர் அவர்களை சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தண்டிப் பதா, அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட வராக கருதப்பட்டு, நீதிமன்ற விசா ரணைக்கு உட்படுத்துவதா என்பதை வாரியம் முடிவு செய்யும். மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குற்றம் புரிந்து 21 வயதுக்கு மேல் பிடிபட்டால், அவர்களை பெரியவர் களுக்கு இணையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து புனேயைச் சேர்ந்த தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான தெஹ்சீன் பூனா வாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், ‘நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ள புதிய சிறார் நீதி சட்டம், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14(அனைவரும் சமம்) என்ற அம்சத்துக்கு எதிரானது; பாரபட்ச மானது; கொடூரமானது. இச்சட்டம் குழந்தைகள் மற்றும் வளரிளம் பிள்ளைகளின் குற்றங்கள் தொடர் பாக 1800-ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் நடை முறைக்கு எதிரானது. குழந்தை களின் உரிமைகள் தொடர்பாக ஐ.நா. தீர்மானத்திற்கும் எதிரானது.எனவே, குழந்தைகளுக்கு எதிரான இச்சட்டத்தை மத்திய அரசு அமல் படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.