

எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களின் அனுமதியை பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதி ரான வழக்குகளை விரைந்து விசா ரித்து தீர்ப்பளிக்க வலியுறுத்தி வழக்கறிஞர் அஸ்வினி உபாத் யாய சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில் உதவ உச்ச நீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா அண்மையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது:
எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசார ணையை, சிபிஐ மற்றும் அமலாக் கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் மிகவும் தாமதப் படுத்துகின்றன. 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவில்லை.
அமலாக்கப் பிரிவினர் தொடர் புடைய பல வழக்குகளில் சொத்து களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர். வேறு எதுவும் செய்ய வில்லை
மக்களுக்கு நீதி வழங்க விரை வான விசாரணைகள் தேவை. வழக்குகளை இப்படி இழுத்தடிக்க வேண்டாம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற விசார ணைக்கு பிறகு நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
எங்களை போலவே விசா ரணை அமைப்புகளும், ஊழியர் களின் பற்றாக்குறையால் பாதிக்கப் படுகின்றன. நீதிமன்றங்களைப் போல அவர்களுக்கும் பணிச்சுமை இருப்பதை புரிந்து கொள்கிறோம். ஆனால், சில வழக்குகளில் அவர் கள் சிறப்பு நடைமுறைகளை மேற் கொள்ள வேண்டும். இதற்காக கூடுதல் வசதிகள் தேவைப்படுகின்றன.
எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இதை நாங்கள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் அந்த வழக்குகளை ஒரு விசாரணை அதிகாரியோ அல்லது உயர் நீதிமன்றமோ விசாரித்திருக்க வேண்டும்.
எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்குகளை தன்னிச்சையாக இனி வாபஸ் பெற முடியாது. அதற்காக சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களின் அனுமதியை மாநில அரசுகள் பெறவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விசா ரணை ஏஜென்சிகளுக்கு உத் தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக் கலாம். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளின் விசா ரணைகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதி மன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்" என்றார்.
இதுதொடர்பாக விரிவான உத்தரவை பின்னர் இந்த அமர்வு பிறப்பிக்கும் என்று நீதிபதி கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.