

மேகாலயாவில் கடந்த 2017-ல்சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் எம்எம்ஏ ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவின் ரி-போய் மாவட்டம், மவதி தொகுதியில் இருந்து கடந்த 2013-ல் சுயேச்சைஎல்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜூலியஸ் டோர்பாங். இவர் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2017-ல் புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, டோர்பாங் தலைமறைவானார். பின்னர் அவர் குவாஹாட்டி புறநகர்பகுதியில் கைது செய்யப்பட்டார்.
ஜூலியஸ் டோர்பாங் மீது போஸ்கோ சட்டம் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாங்போ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக கடந்த 2020-ல் மேகாலயா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் டோர்பாங்குக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரி-போய் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'ஹின்னியூட்ரெப் தேசிய விடுதலை கவுன்சில்' என்ற கிளர்ச்சிக்குழுவின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜூலியஸ் டோர்பாங் கடந்த2007-ல் போலீஸில் சரணடைந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்குஎதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.-பிடிஐ