ஆப்கன் மக்கள் இந்தியா வர இ- விசா கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

ஆப்கன் மக்கள் இந்தியா வர இ- விசா கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ- விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருந்தனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய விமானப்படை விமானம் தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை மீட்டு வருகின்றன. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் அதிகமான அளவு இந்தியாவுக்கு வர முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா வர விரும்பும் ஆப்கன் மக்கள் இதற்கான இணையதளத்தில் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in