Last Updated : 08 Feb, 2016 09:45 AM

 

Published : 08 Feb 2016 09:45 AM
Last Updated : 08 Feb 2016 09:45 AM

மீட்புப் பணிகளில் 162 மோப்ப நாய்கள்: சிறப்புப் பயிற்சி அளிக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை

பூகம்பம், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது பொதுமக்களை காப்பாற்றும் நோக்கில் 162 மோப்ப நாய்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை பயிற்சி அளித்து வருகிறது.

உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதே போல் கடந்த ஆண்டு நேபாளத்தில் நிகழ்ந்த பூகம்பத்தின் போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கட்டிட இடிபாடு களில் சிக்கியிருப்பவர்களையும் மயங்கிய நிலையில் இருப்பவர் களையும் எளிதாக கண்டுபிடித்து மீட்கும் வகையில் மோப்ப நாய் களை பயன்படுத்த தேசிய பேரிடர் மீட்புப் படை முடிவு செய்துள்ளது. இதற்காக 162 நாய்களுக்கு பிரத் யேக பயிற்சி அளித்து வருகிறது.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஒ.பி.சிங் கூறும்போது, ‘‘இயற்கை பேரிடர்களை சமாளிக் கும் பணியில் மீட்புப் படையின ருக்கு துணையாக மோப்ப நாய் களை பயன்படுத்த முடிவு செய் தோம். இதற்காக பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடர் மீட்புப் பணி களில் மோப்ப நாய்களும் ஈடுபடுத் தப்படுவது இதுவே முதல் முறை.

வழக்கமாக காவல்துறை மற்றும் ராணுவம் வசமிருக்கும் நாய்களுக்கும், இந்த நாய் களுக்கும் நிறைய வித்தியாசங் கள் உள்ளன.

இடிபாடுகளில் யாராவது உயி ருடன் இருக்கின்றனரா என்பதை இந்த நாய்கள் மோப்பம் பிடித்து எளிதாக கண்டுபிடித்துவிடும். அந்த அளவுக்கு திறமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x