

டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமி குடும்பத்தாரை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.
இதனால், ட்விட்டர் நிறுவனம் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கி, 2 நாட்கள் கழித்து செயல்பட அனுமதித்தது. ஆனால், இதற்குள், ஆந்திர மாநில முன்னாள் எம்.பி. ஜி.வி. ஹர்ஷ குமாரின் மகன் ஜி.வி. ஸ்ரீராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து, காடையை வறுத்து, அதை ‘ட்விட்டர் பறவை’ என வர்ணித்து, டெல்லியில் உள்ள ட்விட்டர்நிறுவனத்துக்கு பார்சல் அனுப்பி எதிர்ப்பை தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினரே அதிருப்தி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எம்.பி.யின் மகன் மீதும் அவரது நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது.
அதன்படி, இவர்களை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளது. இதனை அறிந்து ஸ்ரீராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே இறந்து போனகாடையை பார்சல் அனுப்பி எங்களின் எதிர்ப்பை காண்பித்தோமே தவிர, உயிருடன் இருந்த பற வையை நாங்கள் சமைக்க வில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.