Last Updated : 19 Feb, 2016 08:17 AM

 

Published : 19 Feb 2016 08:17 AM
Last Updated : 19 Feb 2016 08:17 AM

மத்திய பல்கலைக்கழகங்களில் தேசிய கொடி பறப்பது கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என்று மத்திய மனித ஆற்றல் துறை உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) கடந்த 9-ம் தேதி அப்சல் குருவின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது சிலர் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப் பட்டார். மேலும் சில மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கண்ணய்யா குமாருக்கு ஆதரவாகவும் எதிரா கவும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் டெல்லி அருகேயுள்ள சூரஜ்கண்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 46 மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.

அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களின் வளாகத்திலும் பிரதா னமான இடத்தில் தேசிய கொடியை பறக்கவிடுவது கட்டாயம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த கொடிக் கம்பம் 207 அடி உயரமும் 135 கிலோ எடையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை சார்பில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப் பும் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x